மூத்த குடிமக்களே.. இலவசமாக கோயி சுற்றுலா - முன்பதிவு செஞ்சுடீங்களா?

Tamil nadu
By Sumathi Sep 10, 2024 08:30 AM GMT
Report

மூத்த குடிமக்களை கட்டணமில்லாத ஆன்மீக பயணம் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

ஆன்மீக சுற்றுலா

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மீக பயணத்தை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. புரட்டாசி மாதம் வைணவ கடவுளான பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால்,

மூத்த குடிமக்களே.. இலவசமாக கோயி சுற்றுலா - முன்பதிவு செஞ்சுடீங்களா? | Free Temple Tour For Senior Citizens In Tamil Nadu

சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மண்டலங்களில் உள்ள புகழ்பெற்ற வைணவ கோவில்களுக்கு 100 பக்தர்களை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா பயணம் - எப்படி முன்பதிவு செய்வது?

மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா பயணம் - எப்படி முன்பதிவு செய்வது?

முழு விவரம்

அவர்கள் 60 முதல் 70 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். அறநிலையத்துறை இந்த ஆன்மீக பயணத்தை வரும் 21.09.2024 , 28.09.2024 , 05.10.2024 , 12.10.2024 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக அழைத்து செல்லவுள்ளது.

minister sekar babu

இதில், கலந்து கொள்ள விரும்புவோர் www.hrce.tn.gov.in என்ற வலைத்தளத்தில் சென்று இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் வரும் 19.09.2024 க்குள் மண்டல அலுவலகத்தில் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களே.. இலவசமாக கோயி சுற்றுலா - முன்பதிவு செஞ்சுடீங்களா? | Free Temple Tour For Senior Citizens In Tamil Nadu

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1757 தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.