தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

Schools Student Admission Private Free
By Thahir Apr 20, 2022 07:27 AM GMT
Report

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஏழை குழந்தைகள் படிப்பதற்கான சட்டம் அமலில் உள்ளது.

எனவே,அதன்படி நடப்பாண்டில் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்கேஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் இலவசமாக படிக்க முடியும் என்பது இந்த திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும்.

மாநிலம் முழுவதும் உ்ளள 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன.

நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பம் இன்று தொடங்கி மே 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.

rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.