மாணவர்களுக்கு மீண்டும் இலவச லேப்டாப்? - அன்பில் மகேஷ் பதில்!
மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இலவச லேப்டாப் திட்டம்
கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் இந்த திட்டம் தொடங்கப்பட்டது . தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் சிறந்த திறன்களை பெற வசதியாக மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.
இந்த திட்டம் மூலம் பல ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு ன்வந்த பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. மாணவர்கள் அனைவரும் இந்த திட்டத்திற்காக காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நிருபர்களுக்கு பதில் அளித்துள்ளார்.
முடிவு செய்யவில்லை
அவர் கூறுகையில் " கொரோனா தொற்றுக்கு பின்னர் அதிக நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதா அல்லது டேப்லெட் வழங்குவதை என்பது குறித்து முடிவு செய்யவில்லை என்று அவர் தெரிவித்தார்.