துபாய் போறீங்களா.. பயணிகளுக்கு ஹோட்டல் வசதி இலவசம் - எப்படி தெரியுமா?
துபாய்க்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு ஹோட்டல் வசதியை விமான நிறுவனம் இலவசமாக வழங்குகிறது.
துபாய் பயணம்
துபாய்க்கு வரும் அல்லது துபாயில் வந்து விமானம் மாறும் மக்களுக்காக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இலவச தங்கும் வசதியை வழங்குகிறது. மே 26 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான பயணத் தேதிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு மட்டுமே..

ஜூன் 11 வரைதான் இந்த சிறப்பு சலுகைக்கான போர்ட்டல் திறந்திருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. பயணிகள் பயணிக்கும் இருக்கை வகைக்கு ஏற்ப தாங்கும் விடுத்தது வசதிகள் வழங்கப்படும்.
ஹோட்டல் வசதி
முதல் வகுப்பு அல்லது வணிக வகுப்பில் எமிரேட்ஸ் ரிட்டர்ன் டிக்கெட்டை வாங்கும் அல்லது துபாயில் மாறும் பயணிகளுக்கு, ஹோட்டல் துபாய் ஒன் சென்ட்ரலில் இரண்டு இரவு தங்கும் வசதி கிடைக்கும். இந்த ஹோட்டல் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது.

பிரீமியம் எகானமி கிளாஸ் அல்லது எகானமி வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு துபாயில் உள்ள நோவோடெல் வேர்ல்ட் டிரேட் சென்டரில் ஒரு இரவு தங்கும் வசதி கிடைக்கும்.
இதற்கான முன்பதிவுகளை emirates.com மூலம் துபாய் வருவதற்கு குறைந்தபட்சம் 96 மணிநேரம் முன்பு அறைகளுக்கான முன்பதிவு செய்ய வேண்டும். தங்கள் எமிரேட்ஸ் போர்டிங் பாஸின் நகலை கையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.