சிலிண்டர் புக் செய்தால் தங்கம் இலவசம் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்
நவராத்திரி பண்டிகைக் கொண்டாட்டம் தொடங்கியுள்ள நிலையில் பேடிஎம் நிறுவனம் 'நவராத்திரி கோல்டு' என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வு நாளுக்குநாள் பொதுமக்களை பெரிதும் பாதித்து வருகிறது. இதற்கு ஒரு முடிவு இல்லையா என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குவோருக்கு சூப்பரான திட்டம் ஒன்றை பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி இந்தியாவில் நவராத்திரி பண்டிகைக் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு நவராத்திரி கோல்டு என்ற திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்தால் 24 கேரட் தங்கம் வெல்ல வாய்ப்பு கிடைக்கும். இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதிக்குள் சிலிண்டர் புக்கிங் செய்ய வேண்டும்.
தினமும் 5 வெற்றியாளர்களின் பெயர் பட்டியலை பேடிஎம் வெளியிடும். அவர்களுக்கு ரூபாய் 10,001 மதிப்புள்ள 24 கேரட் தங்கம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் போட்டியாளர்கள் அனைவருக்கும் ரூபாய் 100 பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேடிஎம் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.