ஒன்றரை ஆண்டுக்குள் ஒன்றை இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு - முதலமைச்சர்

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Nov 11, 2022 07:59 AM GMT
Report

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது ஒட்டுமொத்தமாக 2 லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நமது ஆட்சியில் இன்றுவரை ஒன்றரை லட்சம் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒன்றரை ஆண்டுக்குள் ஒன்றை இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு - முதலமைச்சர் | Free Electricity To Farmers

இலவச மின்சாரம் வழங்கும் விழா

கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சியில், விவசாய பெருமக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டமானது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் நேரில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பயனாளிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி ஒன்று நடைபெற்றது. அவர்கள் 10 ஆண்டுகளில் 2 லட்சம் மின் இணைப்புகளை மட்டுமே கொடுத்தார்கள். ஆனால், நாம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு ஆகிவிட்டது.

ஒன்றரை ஆண்டுக்குள் ஒன்றை இலட்சம் விவசாயிகளுக்கு இலவசமாக மின் இணைப்பு கொடுத்துள்ளோம். நம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும் நாம் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.