ஓராண்டிற்குள் ஒரு லட்சம் இலவச மின்சார இணைப்பு..அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு முதலமைச்சர் பாராட்டு..!

CM Electric MKStalin Service Free Congrats மு.க.ஸ்டாலின் முதலமைச்சர்
By Thahir Apr 16, 2022 05:45 AM GMT
Report

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்ட விவசாயிகளுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

முதலாவதாக வேலுார் மாவட்ட பெண் விவசாயி பேசினார்,அதை தொடரந்து தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பல வருடங்களாக மின் இணைப்புக்காக காத்திருந்தேன் ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையால் மின் இணைப்பு கிடைத்தது என்றார்.

நிகழ்ச்சியில் ஒரு லட்சமாவது பயணிக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணையை வழங்கினார். திருவள்ளூர்,திருவண்ணாமலை,தஞ்சாவூர்,கரூர் ஆகிய 4 புதிய மின் பகிர்மான மண்டலங்களை திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,திட்டங்களை அறிவித்தால் அதை கண்ணும் கருத்துமாக கவனிப்பேன்.

ஓராண்டுக்குள் ஒரு லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னார்கள்.

இந்த ஓராண்டிற்குள் ஒரு லட்சம் பேருக்கு மின் இணைப்பு கொடுத்திட முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்துச்சு.

அமைச்சர் செந்தில் பாலாஜி எதிலும் ஒரு டார்கெட் வச்சு பணியாற்ற கூடியவர்.அந்த டார்கெட்டை எப்படியாவது முடிச்சிடுவாரு அதற்கு இந்த நிகழ்ச்சியே சாட்சியாக அமைந்திருக்கு.

கடந்த ஆண்டு 23.09.2021 ஆம் ஆண்டு சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தாக கூறிய அவர் ஓராண்டு நிறைவு பெறுவதற்குள் ஒரு லட்சம் பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வேகத்திற்கு,இந்த சாதனைக்கு காரணமாக அமைந்திருக்க கூடிய அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தார்.

இலவச மின்சாரத்தின் மூலம் பயில் சாகுபடி அதிகரித்து இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். ஓராண்டுக்குள் ஒரு லட்சம் இலவச மின்சார திட்டத்தை வழங்கி சாதனை படைத்துள்ளது. இந்த அரசு உழவர்களுடன் எப்போதும் துணை நிற்கும் என்றார்.