பொங்கல் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் - முதலமைச்சர் ஆலோசனை
பொங்கல் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதலமைச்சர் ஆலோசனை
ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.
அதே போல இந்தாண்டும் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்வுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தபட்டு வருகிறது.

இதில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கதர்துறை அமைச்சர் காந்தி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
அதில், இந்த வருடம் எவ்வளவு பயனாளிகள் இந்த திட்டத்தால் பயன் பெற போகிறார்கள்.? அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.