தீபாவளிக்கு இலவச வேட்டி,சேலை - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
Diwali
M K Stalin
Tamil nadu
Festival
By Sumathi
இலவச வேட்டி, சேலை வழங்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலவச வேட்டி, சேலை
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படும். இந்நிலையில் தீபாவளியையொட்டி தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.
இதனை பெறுவதில் முதியோர்களின் கைரேகை தோல்வி அடைந்தாலும் கையெழுத்து போட்டு வேஷ்டி, சேலைகளை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்தவாரம் முதல் பெறலாம்.