கொரோனாவால் இறப்பவர்களை 3 மாதங்கள் இலவசமாக தகனம் செய்ய நடவடிக்கை - ஈஷா அறிவிப்பு...
ஈஷா அறக்கட்டளையால் பராமரிக்கப்படும் 18 மயானங்களில் அடுத்த 3 மாதங்களுக்கு கொரோனாவால் இறப்பவர்களை இலவசமாக தகனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலையில் பாதிக்கப்பட்டவர்களை விட உயிரிழந்தவர்களை தகனம் செய்ய இந்திய மக்கள் மட்டுமின்றி தகன மேடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் கூட விழிபிதுங்கி போயுள்ளனர். அந்த அளவுக்கு நோயின் தாக்கம் உள்ளது.
#ஈஷாமயானங்கள், கோவிட் தொற்றால் காலமானவர்களுக்கு கட்டணமின்றி தகன சேவையை அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கும். இந்த உயிர்கொல்லி வைரசுக்கு அன்பிற்குரியவர்களை பறிகொடுத்தோருக்கு ஆதரவாய் இருக்க விரும்புகிறோம்.@mkstalin @Subramanian_ma @TNDeptofHealth #IshaCovidAction #DignityInDeath https://t.co/LXykHRexUG
— IshaFoundation Tamil (@IshaTamil) May 30, 2021
இந்நிலையில் ஈஷா அறக்கட்டளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈஷா மயானங்கள் கொரோனா தொற்றால் காலமானவர்களுக்கு கட்டணமின்றி தகன சேவையை அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கும். இந்த உயிர்க் கொல்லி வைரஸூக்கு அன்பிற்குரியவர்களை பறிகொடுத்தோருக்கு ஆதரவாய் இருக்க விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளது.
கோவையில் 12 மயானங்கள், சென்னையில் 4, நாமக்கல் மற்றும் நெய்வேலியில் தலா ஒன்று என மொத்தம் 18 மயானங்கள் அந்த அறக்கட்டளையால் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.