முதியவர்கள்,மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு இலவச கார் சேவை

service election disabled eleder
By Jon Apr 05, 2021 11:20 AM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிக்கு வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கார் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ளது . இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தால் கையாளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தேர்தலில் வாகு செலுத்துவதற்காக வாக்குச்சாவடிக்கு செல்லும் 80 வயதுக்கு அதிகமானோர் மற்றும் மாற்று திறனாளிகள் சிரமமின்றி வருவதற்கு இலவச கார் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி,கோவை ஆகிய மாநகரங்களில் ஊபர் கார் சேவை நிறுவனத்துடன் இலவச சேவையை வழங்குகிறது.