ஆண்களுக்கும் இலவச பயணம்; மனைவி, காதலினு ஊர் சுற்றலாம் - ராஜேந்திர பாலாஜி
விருதுநகரில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.
இலவச பேருந்து
அப்போது, பஸ் மினி பஸ்ஸுல பெண்கள் மட்டும் போய்ட்டு இருந்தாங்கல்ல! இப்போ ஆண்களும் குடும்பத்தோட போகலாம்! ஆணும் போகலாம், பெண்ணும் போகலாம்.

ஒன்னா இருந்த குடும்பத்தை திமுக பிரிச்சி விட்டுடிச்சி. என் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேர்த்துவிடுறாரு! புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்தே பஸ்ஸுல போகலாம். சிவகாசி பழனியாண்டவர் தியேட்டரில் படம் பார்க்க போகணுமா?
ராஜேந்திர பாலாஜி கலகல
உன் மனைவியை கூட்டிட்டு போ, இல்லாட்டி காதலியை கூட்டிட்டு போ. இருவரும் சேர்ந்தே ஓசில போங்க. சினிமா டிக்கெட் மட்டும் எடுத்துக்கோங்க போதும். இலவச பஸ் பயணத்தை கொடுப்பது யாரு, எங்கள் அண்ணன் எடப்பாடி பழனிசாமி.
ஏழை மக்களின் மனசு எப்படி இருக்கும் என்பது அவருக்கு தெரியும். இல்லாதவர்களுக்கு எதை செய்தால் பிடிக்கும் என்பது அவருக்கு தெரியும். எதை செய்தால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள், என்ன செய்தால் அவர்களின் துன்பம் போகும்.
பெண்களுக்கு திமுக கொடுத்திருக்கும் ஓட்டை பஸ்ஸுலாம் வராது. அதிமுக ஆட்சியில் நல்ல புதிய பேருந்துகள் வரும் என தெரிவித்துள்ளார்.