மகளிருக்கான இலவச பேருந்து பயணச்சீட்டு மாதிரி வெளியீடு!

bus woman ticket
By Irumporai Jun 19, 2021 03:30 PM GMT
Report

கட்டணமின்றி நகரபேருந்தில் பயணம் செய்யும் பயணச்சீட்டின் மாதிரி வெளியிடப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிரும் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், முதல் நாளிலேயே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதில், ஒன்றாக அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற கோப்பும் ஒன்றாக இருந்தது.

இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளி, மாற்றுத்திறனாளியின் உதவியாளர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஆகியோரும் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என அரசு அறிவித்தது.

இந்நிலையில், மகளிர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளியின் உதவியாளர் ஆகியோர் கட்டணமின்றி நகர பேருந்தில் பயணம் செய்யும் பயணச்சீட்டின் மாதிரி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.