மகளிர் இலவச பேருந்து : இந்த செய்தி வதந்தி விளக்கம் கொடுத்த அமைச்சர்

By Irumporai Oct 05, 2022 07:29 AM GMT
Report

மகளிர் இலவச பேருந்தில் விருப்பப்பட்டால் கட்டணம் என்பது ‘வதந்தி’ என அமைச்சர் சிவசங்கர் ட்விட் செய்துள்ளார்.

வைரலான அமைசச்ர் பேச்சு

அமைச்சர் பொன்முடி, ஒரு மேடையில் ஓசியில் பெண்கள் பேருந்தில் பயணம் செய்வதாக கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனை தொடர்ந்து மூதாட்டி ஒருவர், நான் இலவசமாக பயணம் செய்யமாட்டேன். பணம் கொடுத்து தான் பயணம் செய்வேன் என கூறி நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.

மகளிர் இலவச பேருந்து : இந்த செய்தி வதந்தி விளக்கம் கொடுத்த அமைச்சர் | Free Bus This News Is Rumour Minister Sivashankar

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று, மகளிர் இலவச பேருந்தில் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

அந்த செய்தி வந்ததி

இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மகளிர் இலவச பேருந்தில் விருப்பப்பட்டால் கட்டணம் என்பது ‘வதந்தி’.

இலவச பேருந்து பயணம் செய்ய விரும்பாத பெண்களிடம் பணம் வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடுக்க வாய்மொழி உத்தரவிட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என ட்வீட் செய்துள்ளார்.