பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் - தமிழ்நாடு முழுவதும் செயல்பாட்டிற்கு வந்தது
Tamil Nadu
Stalin
Free Bus
By mohanelango
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று திமுக ஆட்சி அமைத்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது.
முதல்வரான பிறகு பல முக்கியமான கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் இடம்பெற்றன.
அதில் முக்கியமாக பெண்களுக்கு மாநகர சாதாரண கட்டன பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் அறிவிக்கப்பட அன்றே செயல்பாட்டிற்கு வந்தது. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் செயல்பாடிற்கு வந்தது.