அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் - துவக்கி வைத்தார் முதலமைச்சர்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியை சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
விலையில்லா சைக்கிள்
தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச கைப்பை, இலவச புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே போல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.
கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது 2021 - 2022 கல்வி ஆண்டுக்கான மிதிவண்டிகள் வழங்குவதற்கு அரசு ஆயத்தமாகி வருகிறது.
முதல்வர் ஸ்டாலின்
6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதன்படி, அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.