குடிமகன்களை குஷி படுத்திய திருமணம்
திருமணம் ஆனவர்களுக்கு ஒரு குவாட்டர், திருமணம் ஆகாதவர்களுக்கு இரண்டு குவாட்டர்:
திருமணத்திற்கு வந்தவர்களுக்கு சர்பரைஸ் கொடுத்து அசத்தல் சிவகங்கை அருகே திருமணத்திற்கு வருபவர்களுக்கு குவாட்டரும் சிக்கனும் கொடுப்பதாக பிளக்ஸ் போர்டு வைத்தது மட்டும் அல்லாமல்
சொன்னபடி அதனை கொடுத்தும் குடிமகன்களை மகிழ்ச்சி அடைய செய்த ருசிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை அருகே கீழகண்டனி கிராமத்தில் ஜெயமுத்து, சரண்யா, ஆகியோர் திருமண வரவேற்பு பிளக்ஸ் போர்டில் திருமணத்திற்கு வருபவர்களுக்கு குவாட்டரும் சிக்கனும் இலவசம் என்று பிளக்ஸ் போர்டு வைத்து இருந்தனர்.
மேலும் அதில் திருமணம் ஆனவர்கள் என்றால் ஒரு குவாட்டரும் சிக்கனும் இலவசம் என்றும்,
திருமணம் ஆகதாவர்களுக்கு இரண்டு குவாட்டரும் சிக்கனும் இலவசமாக கொடுக்கப்படும் என்றும் அதற்கு ஆதார் கார்டு கட்டாயம் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
அதன்படி திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதார் கார்டை வாங்கி பார்த்து விதிமுறை படி குவாட்டர்களை கொடுத்து குடிமகன்களை குஷி படுத்தியுள்ளனர்.
இவர்களது வித்தியாசமான முயற்சி குடிமகன்களை குஷிபடுத்தினாலும், குடும்பத்துடன் வந்தவர்கள் மொய் செய்து, ஏக்கத்துடன் சென்றனர்.