பெண்களிடம் உல்லாசமாக இருக்க சம்பளம் : மும்பை வாலிபரிடம் ரூ.76 ஆயிரம் மோசடி

Mumbai
By Irumporai Oct 16, 2022 02:42 AM GMT
Report

பெண்களிடம் உல்லாசமாக இருந்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்றுக்கூறி மும்பை வாலிபரிடம் இருந்து ரூ.76 ஆயிரம் மோசடி செய்த கும்பலை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைனில் விளம்பரம்

மும்பை செம்பூரை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவர் கார்களை கழுவும் வேலை பார்த்து வந்தார். இதில் போதுமான வருமானம் கிடைக்காததால் வேறு வேலையை தேடினார். கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி ஆன்லைனில் வேலையை தேடியபோது, ஒரு விளம்பரத்தை கண்டார்.

அதில், பெண்களிடம் உல்லாசமாக இருக்கும் ஆண்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை நம்பிய வாலிபர் அதில் இருந்த அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டார்.

பெண்களிடம் உல்லாசமாக இருக்க சம்பளம் : மும்பை வாலிபரிடம் ரூ.76 ஆயிரம் மோசடி | Fraud Of Rs 76000 On Mumbai Youth

மறுமுனையில் சனம் என்ற பெண் பேசிய போது தாங்கள் எஸ்காட் சர்வீஸ் நடத்தி வருவதாகவும், இதில் சேரும் வாலிபர்கள் பெண்களிடம் உல்லாசமாக இருக்க வாய்ப்பு தருவதாக தெரிவித்தார்.

ஆசைவார்த்தை கூறி மோசடி

உல்லாசத்துக்கு பிறகு அப்பெண்கள் உங்களுக்கு தேவையான பணத்தை வழங்குவார்கள் எனவும், இதற்காக தங்களிடம் உறுப்பினராக சேர ரூ.1,000 தர வேண்டும் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.

இதற்கு விருப்பம் தெரிவித்த வாலிபர் பணத்தை செலுத்தி உள்ளார். இதன்பின்னர் வெவ்வேறு கட்டங்களில் வாலிபரிடம் இருந்து ரூ.76 ஆயிரத்தை அந்த மோசடி கும்பல் பறித்துள்ளது. இந்த நிலையில் உல்லாசத்திற்காக பெண்ணின் தொடர்பு நம்பர் வாலிபருக்கு கிடைக்கவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் புகாரின்படி காவல்துறை வழக்கு பதிவு செய்து பெண் உள்பட மோசடி கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.