நடிகர் சூர்யாவின் நிறுவனத்தின் பெயரில் மோசடி - கடும் எச்சரிக்கை

2dentertainment actorsurya
By Petchi Avudaiappan Aug 26, 2021 05:40 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

 நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உள்ள நடிகர் சூர்யா 2டி எண்டெர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

இதன்மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வெளியான நிலையில் தற்போது 'உடன் பிறப்பே', 'ஓ மை டாக்', 'ராமே ஆண்டாலும், ராவணே ஆண்டாலும்', 'ஜெய் பீம்' ஆகிய படங்கள் தயாராகி வருகிறது.

இந்நிலையில் 2டி நிறுவனத்தின் பெயரில் போலி மின்னஞ்சல் முகவரி, லோகோவைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் 2டி நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், நடிக்க வாய்ப்பு தேடும் நபர்களை குறிவைத்து போலி மின்னஞ்சல் முகவரி, 2டி நிறுவனத்தின் லோகோ உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சிலர் அழைப்பு விடுப்பதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது.

எங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி பணம் பறிக்க முயன்ற குற்றத்துக்காக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளோம். வருங்காலங்களில் இதுபோன்ற நபர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்.

மேலும் இதுபோன்ற நபர்களிடம் உங்களின் சுய விவரங்களை தெரிவிக்காதீர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.