இயக்குநர் சுந்தர்.சி மீது போலீசில் மோசடி புகார்

Sundar C
By Yashini Apr 09, 2026 06:02 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்.சி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அவர் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி முடித்ததுடன், தற்போது விஷால் நடிப்பில் புருஷன் படத்தையும் இயக்கி வருகிறார்.

இதற்கிடையில் அரசியலிலும் களமிறங்கிய அவர், மதுரை மத்திய தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் புதிய நீதி கட்சி சார்பில் போட்டியிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், சுந்தர்.சி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சுந்தர்.சி மீது போலீசில் மோசடி புகார் | Fraud Complaint Filed Against Director Sundar C

ஒரு படத்திற்காக ரூ.20 கோடி பட்ஜெட், ரூ.5 கோடி சம்பளம் என ஒப்பந்தம் செய்து, அவருக்கு ரூ.50 லட்சம் முன்பணம் வழங்கியதாகவும், நடிகர்-நடிகைகளுக்கு ரூ.59 லட்சம் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சொன்னபடி, சொன்ன தேதியில் இந்த படத்தை சுந்தர்.சி இயக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அரண்மனை 4 படம் வெற்றி பெற்ற பிறகு, பட்ஜெட்டை ரூ.30 கோடியாகவும், தனது சம்பளத்தை ரூ.10 கோடி வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.

இதனால் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், முன்பணத்தை திருப்பிக் கொடுக்க கேட்டபோதும், பணத்தை வழங்காமல் மிரட்டியதாக அப்புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது