பண மோசடி புகார் நடிகர் ஆர்யா குற்றப்பரிவு போலீசார் முன்பு ஆஜர்!

Arya Fraud Complaint
By Thahir Aug 11, 2021 05:57 AM GMT
Report

பண மோசடி புகாரில் நடிகர் ஆர்யா மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்பு ஆஜராகி விளக்கமளித்தார்.

பண மோசடி புகார் நடிகர் ஆர்யா குற்றப்பரிவு போலீசார் முன்பு ஆஜர்! | Fraud Complaint Arya

ஜெர்மனியைச் சேர்ந்த வித்ஜா என்ற பெண்ணுடன் நடிகர் ஆர்யா நெருங்கி பழகியதாகவும், அவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஆன்லைன் முறையில் பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ஆர்யா நடிகை சாய்ஷாவை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த வித்ஜா, பண மோசடி தொடர்பாக சிபிசிஐடியில் ஆன்லைன் முறையில் புகாரளித்தார்.

நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், ஆர்யா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் சென்னை காவல்துறை ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு நடிகர் ஆர்யா நேரில் ஆஜராகி தன்மீதான குற்றச்சாட்டுகள் விளக்கமளித்தார். 2 மணி நேரத்துக்குப்பின் வெளியே வந்த அவர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.