பிரான்சில் இன்று கொண்டாடப்படும் மிக வித்தியாசமான பண்டிகை! இப்படி நடந்தால் மரணம்
மெழுகுவர்த்தி மற்றும் தோசை போன்ற ஒரு உணவுப்பொருளை மையமாகக் கொண்டு இன்று பிரான்சில் Candlemas என்னும் ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த பண்டிகை தொடர்பில் பல நம்பிக்கைகள் (மூட நம்பிக்கைகளும்) பிரான்சில் நிலவுகின்றன. ஐந்தாம் நூற்றாண்டில் ரோமுக்கு வரும் ஏழை புனிதப்பயணிகளுக்கு உதவுவதற்காக இந்த மெழுகுவர்த்திப் பண்டிகையின்போது தோசை போன்று காணப்படும் crêpes என்னும் உணவை அன்னதானம் செய்யும் வழக்கத்தைக் கொண்டுவந்தார் Pope Gelasius I என்னும் போப்பாண்டவர்.
அப்போது, தேவாலயத்திலிருந்து மெழுவர்த்திகளை நடந்தே வீட்டுக்கு கொண்டுவருவார்கள் மக்கள். ஒருவர் கொண்டுவரும் அந்த மெழுகுவர்த்தி, அவர் வீடு வந்து சேரும் வரை அணையாமல் இருந்தால், அவர் அந்த ஆண்டு இறக்கமாட்டார் என்பது மக்களுடைய நம்பிக்கை. பிரான்சின் சில பகுதிகளில் இன்னொரு நம்பிக்கையும் உள்ளது.
அதாவது அந்த மெழுகுவர்த்தியை கொண்டுவரும்போது, மெழுகுவர்த்தியிலிருந்து வழியும் மெழுகு, ஒரு பக்கமாக மட்டுமே வழிந்தால், அந்த ஆண்டு அந்த மெழுகுவர்த்தியை சுமந்துவந்தவரின் அன்பிற்குரியவர் ஒருவர் இறந்துவிடுவார் என மக்கள் நம்புகிறார்கள்.
இந்த பண்டிகையின்போது தோசை போன்று காணப்படும் crêpes என்னும் உணவு அதிகம் தயாரிக்கப்படுகிறது, அதையும் எப்படி தயாரிக்கவேண்டும் என்பதிலும் பல நம்பிக்கைகள் உள்ளன.
மேலும், மெழுகுவர்த்தி பண்டிகையின்போது மழை வந்தால் தொடர்ந்து அடுத்த 40 நாட்களுக்கு மழைபெய்யும் என்ற ஐதீகமும் உள்ளது.