60 வயதில் 48 மாடி கட்டிடத்தில் ஏறி சாதனைப் படைத்த ரியல் 'பிரெஞ்சு ஸ்பைடர் மேன்' - வைரலாகும் வீடியோ
60 வயதில் 48 மாடி கட்டிடத்தில் ஏறி சாதனைப் படைத்த பிரெஞ்சு ஸ்பைடர் மேனின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆலியன் ராபர்ட் என்ற ‘பிரெஞ்சு ஸ்பைடர் மேன்’
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஆலியன் ராபர்ட். இவருக்கு வயது (60). இவர் உயரமான கட்டிடங்களில் எந்தவித பாதுகாப்பு கருவிகளும் இன்றி ஏறுவதில் புகழ் பெற்றவர். இதனால் இவரை 'பிரெஞ்சு ஸ்பைடர் மேன்' என்று அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில், ஆலியன் ராபர்ட் தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள 48 மாடிகளை கொண்ட வானளாவிய கட்டிடத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி ஏறி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
வெறும் 60 நிமிடத்தில் கட்டிடத்தின் உச்சியை அடைந்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
இவர் கட்டிடத்தின் உச்சியை அடைந்ததும் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
French ‘Spider-Man’ scales 48 Storey, skyscraper aged 60 !!
— Sajjad (@Sajjad57678616) September 18, 2022
Robert,dressed in red, on reaching the top of the 187-metre (613-foot) Tour TotalEnergies building in Paris raised his arms with a message , being 60 years old is nothing. pic.twitter.com/UV8i206SLK