பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் : பெரும் சிக்கலில் அதிபர் இம்மானுவேல்
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது , இந்த மாதம் 19ம் தேதி அன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில்இறுதிகட்ட வாக்குப்பதிவு, நேற்று நடைபெற்றது.
இந்த வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் இன்று காலை வெளியானது அதில் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றவில்லை
மேக்ரோன் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலர் தோல்வி அடைந்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 577 இடங்களில் அக்கட்சி 245 இடங்களைப் பெற்றம் பெரும்பான்மைக்கு வரவில்லை.

பெரும்பான்மையினை இழந்த மேக்ரோன்
577 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் பெரும்பான்மைக்கு தேவையான 289 இடங்களை விட சற்று குறைவாகவே உள்ளது. இந்த முடிவு அதிபர் தேர்தலில் மேக்ரான் பெற்ற வெற்றியை கடுமையாக பாதித்துள்ளது.
இந்த நிலையில் மேக்ரோனால் மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த முடியாவிட்டால், தோல்வியைன்சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர் அரசியல் வல்லுநர்கள்.
மேலும் உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் செயல்பாடு அவர் உள்நாட்டுப் பிரச்சனைகளின் அவரின் கையாளும் விதம் போன்றவற்றால் கடந்த சில நாட்களாகவே கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார் மேக்ரோன்.