எது செப்டம்பர்ல கொரோனா நான்காவது அலையா? அதிர்ச்சியில் மக்கள்!
இந்தியாவில் பரவிவரும் டெல்டா வகை கொரோனா வைரசஸ் காரணமாக பிரான்சில் கொரோனா நான்காவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் ஜீன்-பிரான்சுவா டெல்ஃப்ரைஸி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடமாக ஆட்டி படைத்து வருகிறது கொரோனா தற்போது கொரோனா வைரசின் 3 வது அலையின் தாக்கம் ஆசிய நாடுகளில் குறைந்தது ஆறுதலான செய்தியாக பார்க்கப்பட்டது.
4 அலை வருகிறதா:
இந்த நிலையில் உருமாற்றம் அடைந்த டெல்டா கொரோனா பல் வேறு நாடுகளில் பரவி மிக மோசமான பாதிப்பினை ஏற்படுத்தி வரும் நிலையில் வரும் செப்டம்பர் மாதத்தில் பிரான்சில் கொரோனா 4-ம் அலை பரவலாம் என அறிவியல் ஆலோசகர் ஜீன்-பிரான்சுவா டெல்ஃப்ரைஸி கூறியுள்ளதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
அவரின் கருத்து படி பிரான்சில் கடந்த சில நாட்களாக டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில்டெல்டா வைரசின் 4-வது அலையின் தாக்கம் அதிகமாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போடுங்க பிழைக்கலாம்:
அதே சமயம் கொரோனா 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இதில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றும், தடுப்பூசி போடுவதை தீவிரபடுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடகங்களுக்கு பேட்டியளித்த பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் டெல்டா கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.