பிரான்ஸை துரத்தும் குரங்கு அம்மை:அறிகுறிகள் என்னென்ன!

France ‎Monkeypox virus
By Sumathi Jun 04, 2022 03:51 AM GMT
Report

பிரான்ஸ் நாட்டி,ல் 51 பேருக்கு குரங்கு அம்மை நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரான்சில் 51 பேருக்கு குரங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் நோய்த்தொற்று பாதிக்கப்ப்பட்டவர்கள் அனைத்தும் 22 முதல் 63 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்றும், ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் டிஸ்சார்ஜ் செய்யப்படதாகவும் பிரெஞ்சு தேசிய பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸை துரத்தும் குரங்கு அம்மை:அறிகுறிகள் என்னென்ன! | France Confirms 51 Monkeypox Cases Health Official

இதன் அறிகுறிகளாக, அடிக்கடி காய்ச்சல், தசைவலி, குளிர், சோர்வு, கைகள் மற்றும் முகத்தில் ஒரு சின்னம்மை போன்ற சொறி மூலம் வெளிப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்த நோய் பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குப் பிறகு சரியாகிவிடும் என்று கூறுப்படுகிறது.

இதுபோன்ற நோய்த்தொற்றை எதிர்பார்க்கவில்லை என்றும், நாட்டில் போதுமான தடுப்பூசி இருப்பு இருப்பதாகவும் பிரெஞ்சு சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்ட பெரியவர்கள், சுகாதார வல்லுநர்கள் உட்பட, அனைவரும் தடுப்பூசி போடுமாறு பிரான்ஸ் பரிந்துரைத்துள்ளது