பிரான்சில் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
பிரான்சில் 15 வயதுக்கு குறைவான பிள்ளைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிறுவர்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது, இது பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என பல ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
இந்நிலையில் பிரான்சின் 15 வயதுக்கு குறைவான பிள்ளைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் கீழவையில் நடந்த வாக்கெடுப்பில் 130 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும், 21 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
சட்டமாகும் முன், இந்த மசோதா நாடாளுமன்றத்தின் மேலவையில் வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டும்.
இதுகுறித்து பிரான்சின் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், பிரான்ஸ் நாட்டு சிறார்கள் மற்றும் பதின்மவயதினரை பாதுகாப்பதில் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய படியாகும் என தெரிவித்துள்ளார்.
