நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும் - கமல் அதிரடி டுவிட்!

india election kamal tweet
By Jon Mar 07, 2021 11:54 AM GMT
Report

நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. தேர்தலில் பணம் புழங்க கூடாது என்று பல்வேறு இடங்களில் காவல்துறை குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளது.

அதனையடுத்து, தமிழகத்தில் சில இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத பல பணங்கள் மற்றும் பரிசு பொருட்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது என்றும் வாக்காளர்கள் பணம் வாங்க கூடாது எனவும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஓட்டுக்கு பணம் வாங்கி தங்கள் உரிமைகளை விற்காதீர்கள் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், மானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம், ஓர் அட்டையில் "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல" என எழுதி வாசலில் மாட்டுங்கள் என்றும் நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.