மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

election west bengal Banerjee polling phase
By Jon Apr 10, 2021 03:30 AM GMT
Report

மேற்குவங்க மாநிலத்தில் 4-ஆவது கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது இதில் முதல் 3 கட்டமாக 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

4ஆவது கட்ட வாக்குப்பதிவு 44 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளுக்கும் வரும் 29-ஆம் தேதியுடன் வாக்குப்பதிவு முடிந்து, மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.