மகள் என வளர்க்கிறாள் இவள் உயரம் குறைந்த தாயடா : சகோதரியுடன் பள்ளிக்கு வரும் நான்காம் வகுப்பு மாணவி வைரலாகும் புகைப்படம்

baby manipoor Minister Th. Biswajit Singh.
By Irumporai Apr 04, 2022 11:55 AM GMT
Report

பெரியவர்களை விட்டு சிறிய வயது குழந்தைகள் வீட்டிலுள்ள தங்கள் சகோதர சகோதரிகளை பராமரிப்பதில் கெட்டிக்காரர்கள். குடும்ப சூழ்நிலையின் காரணமாக சிறுவயது முதலே தங்கள் இளைய உடன்பிறப்புகளுக்கு பல மூத்த சகோதரர்கள் தாயக வேண்டிய நிலை ஏற்படும்.

அந்த வகையில், மணிப்பூர் பகுதியை சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமி, கைக்குழந்தையாக தனது சகோதரியுடன் பள்ளி சென்று பாடம் பயின்று வருகிறார்.

இந்த சிறுமியின் பெற்றோர்கள் வயல் வேலைக்கு சென்று விடுவதால், குழந்தைக்கு சரியான பராமரிப்பு கிடைக்காமல் இருந்துள்ளது. எனவே, பெற்றோர்களுக்கு இடைஞ்சலின்றி இருப்பதற்காக கைக்குழந்தையாக இருக்கும் தனது சகோதரியுடன் நான்காம் வகுப்பு சிறுமி பள்ளிக்கு வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள மணிப்பூர் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் த. பிஸ்வஜித் சிங் அவர்கள், கல்வி பயில்வதற்க்காக சிறுமி செய்யும் அர்ப்பணிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது, பெற்றோருக்கும் உதவியாக இருந்துகொண்டு தனது படிப்பையும் பார்த்துக்கொள்கிறார் என பதிவிட்டுள்ளார்.