அமெரிக்கா மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு 4 பேர் உயிரிழப்பு..!

United States of America
By Thahir Jun 02, 2022 04:16 AM GMT
Report

அமெரிக்காவில் உள்ள மருத்துமனையில் நடத்தப்பட்ட துப்பாகிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளி ஒன்றில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 குழுந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டன.

அமெரிக்கா மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு 4 பேர் உயிரிழப்பு..! | Four Killed In Us Hospital Shooting

இந்த நிலையில் துல்சா நகரில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனை வளாகத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர் மீது சரமாரியாக துப்பாக்கியால் கூட்டார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் துப்பாக்கியால் சுட்ட நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.மேலும் துப்பாக்கிச் சூடு எதற்காக நடத்தப்பட்டது என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.