ஜோதிமணி உட்பட 4 காங்கிரஸ் எம்.பிக்கள் திடீர் இடைநீக்கம்!
மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உட்பட 4 பேரை சஸ்பெண்டு செய்து செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.
இடைக்கால நீக்கம்
நாடாளுமன்ற நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் உள்ளிட்ட 4 பேரை இடைக்கால நீக்கம் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடத்தவிடமால் அமளியில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக மக்களவை சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட நிலையில் 4 பேரையும் சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.
4 எம்.பிக்கள்
மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் 4 எம்.பிக்களும் பங்கேற்க கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அவைக்குள் எந்த பதாகை போராட்டத்தையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். நீங்கள் பதாகைகளை காட்ட விரும்பினால், அதை வீட்டிற்கு வெளியே செய்யுங்கள் என்று எச்சரித்தார்.
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
கல்முனை பிரபல பாடசாலையில் மாணவர்களிடம் அங்கசேட்டை: பொது சுகாதார பரிசோதகரை கைது செய்ய வலைவீச்சு IBC Tamil