கோட்டை போட்டு பிரம்மாண்டம் காட்டும் பாஜக: அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகையும் பாஜக திட்டமும்
பாஜக சார்பில், தாமரை இலை சங்கமம் மாநில மாநாடு இன்றைக்கு சேலத்தில் நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார். சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாஜக இளைஞரணி சார்பில் தாமரை இலை சங்கமம் மாநாடு நடைபெற உள்ளது மாநாட்டின் முகப்பு, தமிழக தலைமைச்செயலகம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில், பங்கேற்பதற்காக ராஜ்நாச்சிங் டெல்லியிலிருந்து புறப்பட்டார்,இதற்காக சேலத்தில் கமலாபுரம் விமான நிலையத்திற்கு வரும் அவருக்கு கட்சியினர் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். அங்கிருந்து தனியார் விடுதிக்கு சென்று ஓய்வெடுக்கும் ராஜ்நாத்சிங், மாலை 4.மணிக்கு விழாமேடைக்கு வருகிறார்.

மாநிலத்தலைவர் எல்,முருகன் மேற்பார்வையில், இளைஞரணி தலைவர் வினோஜ் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றியமைக்கப் போகும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர்.
தமிழக கோட்டையை பிடிப்போம் என்று சொல்லி வரும் பாஜகவினர் தமிழக கோட்டை போலவே மாநாட்டு அரங்கத்தினை அமைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.