புளோரிடாவில் 7 அடிக்கு மேல் எழும்பிய ‘இயன்’ சூறாவளிவால் பேரழிவு; வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டம்..!
புளோரிடாவின் தென்மேற்கு பகுதியில் எழுந்த ‘இயன் சூறாவளி’வால் ‘பேரழிவு’ ஏற்பட்டுள்ளது.
புளோரிடாவில் தொடர் கனமழை
தொடர் கனமழையால் புளோரிடாவில் முழு கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. புளோரிடாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.மக்கள் தங்க இடமின்றி, உணவின்றி பரிதவித்து வருகின்றனர்.
‘இயன் சூறாவளி’வால் ‘பேரழிவு’
புளோரிடாவின் தென்மேற்கு பகுதியில் எழுந்த ‘இயன் சூறாவளி’வால் ‘பேரழிவு’ ஏற்பட்டுள்ளது. இந்த சூறாவளியால் வீடுகள் மற்றும் நிலங்கள் அழிந்துள்ளன. ஃபோர்ட் மியர்ஸ் கடற்கரையில் ஏற்பட்ட பலத்த காற்றால் வீடுகள் இடிந்து விழுந்தன. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பல வீடுகள் வெள்ள நீர் மூழ்கியுள்ளது. மரங்கள் வேரோடு சரிந்து விழுந்துள்ளன.
‘இயன்’ சூறாவளி தென்மேற்கு புளோரிடாவைச் சுத்தியதால் வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. நேற்று பிற்பகல் பலத்த காற்று மற்றும் வெள்ளத்துடன் மாநிலத்தின் மேற்கு கடற்கரையைத் தாக்கத் தொடங்கியது. நேபிள்ஸில் 150 மைல் வேகத்தில் காற்று வீசியது. இந்த ‘இயன்’ சூறாவளி 7 அடிக்கு மேல் புயல் எழுச்சியைக் கண்டது. இயன் சூறாவளியால் தென்மேற்கு புளோரிடாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
தற்போது ‘இயன்’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவின் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Houses are destroyed and some are floating away as Ian's eyewall hammers southwest Florida. This is video from Fort Myers Beach, Florida off Estero Blvd by Loni Architects pic.twitter.com/6GqrxLRv9Q
— Kaitlin Wright (@wxkaitlin) September 28, 2022
First-person view of storm surge from Hurricane Ian in Fort Myers Beach, Florida
— UberFacts (@UberFacts) September 28, 2022
The camera is 6 feet off the ground‼️pic.twitter.com/bQSF3MkaPT