விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத் திருத்தங்களையும் எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் இன்று (28ம் தேதி) தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை எதிர்க்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதும், அதனை எதிர்த்து சட்டப்பேரவையிலிருந்து அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், வேளாண் சட்டத்திருத்த மசோதா மற்றும் சட்ட திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள், விவசாய அமைப்புகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.