ரசிகர்களை பெரிதும் அச்சுறுத்திய, ஃபேவரைட் WWE வீரர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிரபல WWE வீரர் ப்ரே வியாட் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் .
ப்ரே வியாட்
WWE எனப்படும் மல்யுத்த போட்டிக்கென உலகம் முழுவதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த 2009ம் ஆண்டு வின்தம் ரோடன்டா என்கிற 'ப்ரே வியாட்' அறிமுகமானார். கடந்த 14 ஆண்டுகளாக தனது தனித்துவமான சண்டை முறைகளால் குத்துச் சண்டை ரசிகர்களிடையே மிகப் பிரபலமானார்.
மேலும், வியாட் ஃபேமிலி என பெயரிடப்பட்டு அதில் வில்லனாக தோன்றி தன்னுடைய வித்தியாசமான சண்டை நுணுக்கங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். WWE தொலைக்காட்சியில் இவரது சண்டைக் காட்சிகள் பெரும் வரவேற்பை் பெற்றன. இதுவரை இரண்டு முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தனது பயமுறுத்தும் மல்யுத்த முறைகளால் அடுத்த அண்டர்டேக்கராக பார்க்கப்பட்டவர் வியாட்.
ரஸ்ல்மேனியா போட்டிகளில் கலந்துகொண்டு புகழ்பெற்ற WWE வீரர்களாக தி அண்டர்டேக்கர், ஜான் சீனா, ரேண்டி ஆர்ட்டன் ஆகியோருடன் மோதியுள்ளார்.கடந்த 2021 ஆம் ஆண்டு WWE வில் இருந்து விலகிய ப்ரே வியாட் மீண்டும் அக்டோபர் மாதம் 2022 ஆம் ஆண்டு திரும்பினார். அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு சிறிது காலம் ஓய்வில் இருந்த ப்ரே வியாட் மீண்டும் 2023 ஆம் ஆண்டு ராயல் ரம்பிள் தொடரில் பங்கேற்றார்.
மரணம்
கடந்த சில மாதங்களாக கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு போய்ட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார் ப்ரே வியாட். இந்நிலையில் இன்று தனது 36 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு ரசிகர்கள் மற்றும் மல்யுத்த வீரர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபலங்களும் மல்யுத்த வீரர்களும் அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள Triple H ' WWE குடும்ப உறுப்பினரான மல்யுத்த வீரர் பிரே வியாட் உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்' என்று டிரிபிள் ஹெச் தெரிவித்துள்ளார்.
WWE is saddened to learn that Windham Rotunda, also known as Bray Wyatt, passed away on Thursday, Aug. 24, at age 36.
— WWE (@WWE) August 24, 2023
WWE extends its condolences to Rotunda’s family, friends and fans. pic.twitter.com/pabVuaKlnP