பணக்கஷ்டத்தால் அவதிப்படும் நடிகர் கமலின் முன்னாள் மனைவி...? - வெளியான திடுக்கிடும் தகவல்

Kamal Haasan Shruti Haasan
By Nandhini May 11, 2022 10:02 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் 1988-ம் ஆண்டு நடிகை சரிகாவை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு சுருதிஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் ஆகிய 2 மகள்கள் இருக்கின்றனர்.

கடந்த 2004ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனும், சரிகாவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். சரிகா இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 2 முறை சரிகா தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

சிறந்த நடிகைக்காக ஒருமுறை தேசிய விருது வென்ற இவர், ஹே ராம் படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருதை அவர் வென்றார்.

கமலை திருமணம் செய்துகொண்ட பிறகு படங்களில் நடிப்பதிலிருந்து பின்வாங்கினார். ஆனால், கொரோனா லாக்டவுன் சமயத்தில் பணத்துக்கு மிகவும் கஷ்டப்பட்டதால் சீரியலில் நடிக்க சென்றதாகவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து தான் தனது அன்றாட செலவுகளை பார்த்து வருவதாக சரிகா தெரிவித்திருக்கிறார்.

2 மகள்களும் நடிகையாக சினிமாத்துறையில் இருக்கும்போது, பணமின்றி கஷ்டப்படுவதாக நடிகை சரிகா கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

பணக்கஷ்டத்தால் அவதிப்படும் நடிகர் கமலின் முன்னாள் மனைவி...? - வெளியான திடுக்கிடும் தகவல் | Former Wife Of Actor Kamal