#Breaking முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் காலமானார்

By Irumporai Oct 10, 2022 04:41 AM GMT
Report

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவ் 82 வயதில் உடல் நலக்குறைபாடு காரணமாக காலமானார்.

முலாயம் சிங் யாதவ் காலமானர்

உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்த அவர் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார்.முலாயம் சிங் யாதவின் இளமைக் காலத்தில் உயரமானவராக இருந்தாலும், பலசாலியாக இருந்தாலும், மல்யுத்த வீரராக இருந்துள்ளார்.

முலாயமின் பிடியில் இருந்து விடுபட அவரால் முடியாது என்று கூறப்படுகிறது, முலாயம் சிங்கின் திறமையை முதலில் பிரஜா சோஷியலிஸ்ட் கட்சியின் தலைவரான நாத்து சிங் அடையாளம் கண்டார். 1967 தேர்தலில் ஜஸ்வந்த்நகர் சட்டப்பேரவைத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பை அளித்தார்.

#Breaking முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் காலமானார் | Former Uttar Pradesh Cm Mulayam Singh Yadav Died

1990 நவம்பர் 2ம் தேதி பாபர் மசூதியை நோக்கி கரசேவகர்கள் செல்ல முயன்றபோது, அவர்கள் மீது முதலில் தடியடி நடத்தப்பட்டு, பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் 12க்கும் மேற்பட்ட கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, பாஜக ஆதரவாளர்கள் முலாயம் சிங் யாதவை 'மௌலானா முலாயம்' என்று அழைக்கத் தொடங்கினர். 

பிரபலங்கள் இரங்கல்

தொடர்ந்து தனது அரசியல் பயாத்தில் இருந்த முலாயம் சிங் யாதவ் கடந்த சில நாட்களாகவே டெல்லி குருகிராமில் உள்ள மருத்துவமனையில் உடல் நலக்குறைபாடு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த முலாயம் சிங் யாதவ், சற்று நேரத்திற்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

என் மதிப்புக்குரிய தந்தையும், அனைவரின் தலைவரும் இறந்துவிட்டார் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளதாக அக்கட்சியின் அலுவல்பூர்வ டிவிட்டர் பக்கம் தெரிவித்துள்ளது. அவரின் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.