ஆபாசா நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் : டிரம்ப் அதிரடியாக கைது செய்யப்பட்டு விடுவிப்பு
ஆபாச நடிகையுடன் ரகசிய தொடர்பை மறைக்க லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.
அதிபர் டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் கடந்த 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கும் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உடன் ரகசிய தொடர்பு இருந்ததாக தகவல் வெளியாகி கடும் சர்சையினை ஏற்படுத்தியது .

ஆகவே இதனை மறைக்க டிரம்ப் தனது கட்சி நிதியிலிருந்து இந்திய மதிப்பின் படி ரூ 1,06,84,375 கோடி பணம் கொடுத்தாக தகவல் வெளியானது. இதன் காரணமாக டிரம்பிற்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது , இந்த வழக்கானது அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதி மன்றத்தில் நடந்து வருகின்றது.
டிரம்ப் விடுவிப்பு
இதனையடுத்து, நேற்று டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை நியூயார்க் நீதிமன்றத்தில் சட்டமுறைப்படி போலீசார் அதிரடியாக கைதும் செய்தனர். இந்நிலையில்,ஆபாச பட நடிகையுடன் தொடர்பை மறைப்பதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் அதிரடியாக கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு வரும் டிசம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.