முன்னாள் மத்திய அமைச்சர் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்

Narendra Modi
By Irumporai Jan 13, 2023 03:45 AM GMT
Report

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவையொட்டி பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்தியமைச்சர் மறைவு

முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 75. சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சரத் யாதவ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் மறைவு : பிரதமர் மோடி இரங்கல் | Former Union Minister Sharad Yadav Dies

 பிரதமர் மோடி இரங்கல்

இந்நிலையில் சரத் யாதவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி சரத் யாதவ்வின் மறைவை கேட்டு துயரூற்றேன். அவருடைய நீண்ட பொது வாழ்வில் எம்பி ஆகவும், அமைச்சராகவும் தனித்து விளங்கினார்.

அவருடனான உரையாடல்களை எப்போதும் கொண்டாடுவேன். அவர் குடும்பத்தினருக்கும் , தொண்டர்களுக்கும் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.