ட்விட்டர் அலுவலகங்கள் மூடப்படும் என மோடி மிரட்டினார் : ட்விட்டர் முன்னாள் சிஇஓ பகீர் குற்றச்சாட்டு

Twitter Narendra Modi
By Irumporai Jun 13, 2023 04:15 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ட்விட்டர் அலுவலகங்கள் மூடப்படும் என பிரதமர் மோடி அரசங்காம் மிரட்டியதாக ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் போராட்டம் 

ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சி இ ஓ ஜாக் டோர்சே பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் , அதில் ட்விட்டர் நிறுவனம் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில் இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடந்த போது அது தொடர்பாக பதிவான ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என மோடி அரசு அழுத்தம் கொடுத்ததாக ட்விட்டர் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சே பகிர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அலுவலகங்கள் மூடப்படும் என மோடி மிரட்டினார் : ட்விட்டர் முன்னாள் சிஇஓ பகீர் குற்றச்சாட்டு | Former Twitter Ceo Says About Modi And His Govt

மிரட்டல் 

  அரசை விமர்சித்த ட்விட்டர் கணக்குகளை முடக்கவில்லை என்றால் இந்தியாவில் உள்ள ட்விட்டர் அலுவலகங்கள் மூடப்படும் என்றும் ட்விட்டர் ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடத்துவோம் என்றும் எங்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர், இது எல்லாம் நடந்தது இந்தியா எனும் ஜனநாயக நாட்டில் என கூறினார்.

 

கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகள் கழித்து ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ இந்த திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.