இலங்கையில் முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு பலி

Mangala Samaraweera former Foreign Minister of Sri Lanka
By Petchi Avudaiappan Aug 24, 2021 09:36 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இலங்கை
Report

இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா 2வது அலை இன்னும் ஓய்ந்த பாடில்லை. தினம் தினம் புதிய பாதிப்புகள், இறப்புகள் என ஒவ்வொரு நாளும் மக்களுக்கு ரணமாக நகர்கின்றன.

இதனிடையே இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக மங்களா சமரவீரா என்பவர் பதவி வகித்து வந்தார். 65 வயதான அவருக்கு இந்த மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. உடனே தனியார் ஆஸ்பத்திரியில் மங்களா சமரவீரா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மங்களா சமரவீரா கடந்த 2005-2007 மற்றும் 2015-2017 ஆகிய காலகட்டங்களில் 2 முறை வெளியுறவுத்துறை அமைச்சராகவும்,ஒரு முறை நிதி அமைச்சராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.