முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்

Government of Tamil Nadu
By Thahir Sep 21, 2022 08:56 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்.

முன்னாள் சபாநாயகர் காலமானார் 

தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகராக இருந்த சேடப்பட்டி முத்தையா காலமானார்.அவருக்கு வயது 77.

உடல்நலக் குறைவால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார் | Former Speaker Sedapatti Muthiah Passed Away

1977,1980,1984,1991 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

1991 முதல் 1998 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தார். 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும்ட பொறுப்பு வகித்தவர்.

2006ல் அதிமுகவில் இருந்து விலகிய அவர் திமுகவில் இணைந்து பணியாற்ற தொடங்கினார். இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் கப்பல் மற்றும் போக்குவரத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.