இலங்கை அதிபர் தேர்தல்; வாக்களித்தார் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச

Sri Lanka President of Sri lanka
By Thahir Jul 20, 2022 06:20 AM GMT
Report

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கினை செலுத்தினார் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச.

அதிபர் தேர்தல் 

நாடாளுமன்றத்தில் உள்ள மொத்தம் 225 எம்.பிக்கள் வாக்களித்து வருகின்றனர். அதிபரை தேர்ந்தெடுக்க 113 பேரின் ஆதரவு தேவை.

இந்த நிலையில் இந்த அதிபர் தேர்தலில் சூழலில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி எம்பிக்களில் பெரும்பாலானோர், டலஸ் அலகப்பெருமாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை அதிபர் தேர்தல்; வாக்களித்தார் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச | Former Prime Minister Mahinda Rajapaksa Voted

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர். முன்னதாக முதலாவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வாக்களித்தார்.

வாக்களித்த மகிந்த ராஜபக்ச 

இலங்கை அதிபர் தேர்தல்; வாக்களித்தார் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச | Former Prime Minister Mahinda Rajapaksa Voted

இரண்டாவதாக ரணில் விக்ரமசிங்கே வாக்களித்தார். இதை தொடர்ந்து தனது வாக்கினை செலுத்தினார் மு்னனாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இதையடுத்து நமல் ராஜபக்ச,மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் வாக்களித்துள்ளனர். அதை தொடர்ந்து தனது வாக்கினை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிவு செய்து வருகின்றனர்.