முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் கணவர் உயிரிழந்தார்...!

India Death
By Nandhini Feb 24, 2023 11:05 AM GMT
Report

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ஷெகாவத் காலமானார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் கணவர் உயிரிழந்தார்

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கணவர் தேவ்சிங் ஷெகாவத் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 89. இன்று அவருக்கு மாரடைப்பு காரணமாக புனேவில் உள்ள மருத்துமனையில் தேவ்சிங் ஷெகாவத் அனுமதிக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

former-president-pratibha-patil-husband-passes

பிரதமர் மோடி இரங்கல்

முன்னாள் குடியரசுத் தலைவர் கணவர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

கணவர் மறைவால் வாடும் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். சமூகத்திற்கு பல வழிகளில் ஆற்றிய சேவை மூலம் சமூகத்தில் தனி முத்திரை பதித்தவர் ஷெகாவத்" என்று பதிவிட்டுள்ளார்.