தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை: காரணம் என்ன ?

suicide chairman venkatachalam
By Irumporai Dec 02, 2021 01:01 PM GMT
Report

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த வெங்கடாசலம் தற்கொலை  செய்து  கொண்டார்.

 தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த ஏ.வி.வெங்கடாசலம் மீது சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினர் அதிரடி சோதனைகள் நடத்தினர்.

இந்த சோதனையின் போது , பணம் ரூபாய் 13.5 லட்சம், சுமார் 6.5 கிலோ தங்கம் , அதாவது சுமார் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் மதிப்பு மற்றும் வழக்கு சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் ஆகியவை கண்டறிப்பட்டது.

மேலும் பணம் ரூபாய் 13.5 லட்சம் மற்றும் இவ்வழக்கிற்கு சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், இவர்வீட்டில் சுமார் 10 கிலோ சந்தன மரத்தாலான பொருட்கள் மற்றும் சந்தன துண்டுகள், கண்டறியப்பட்டு, தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.