அரசியல் தலைவர்களை கட்டிப்பிடிப்பதாலும், பிரியாணி சாப்பிடுவதாலும் நாடு முன்னேறாது : கொந்தளித்த மன்மோகன் சிங்

BJP PMModi ManmohanSingh
By Irumporai Feb 17, 2022 10:18 AM GMT
Report

ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்ளையும்,ஆட்சியும், பாஜகவின் தேசியவாதமும் வேறுவேறு அல்ல இரண்டும் ஒன்றுதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள்பிரதமரான மன்மோகன் சிங் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் செய்திநிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ளார், அதில் அவர் கூறியதாவது:

பஞ்சாப் மாநிலத்துக்கு பிரதமர் மோடி வந்தபோது, அவருக்கு பாதுகாப்பு விதிமுறை மீறல் நடந்துவிட்டதாக பாஜகவினர் கூறி, முதல்வர் சரண்சித் சன்னியை அவமதித்துவிட்டார்கள். நாட்டின் பொருளாதாரக்கொள்கை கேள்விக்குறியாகவிட்டது.

வேளாண் சட்டங்கள் தொடர்பான மத்திய அரசின் கொள்கைகள் அனைத்தும் இந்த தேசத்தில் மக்களின் கடன் சுமையை மேலும்அதிகரிக்கச் செய்யும்.

பாஜக ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரராகிறார்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள். மத்தியில் ஆளும்அரசின் நோக்கத்திலும், அவர்களின் கொள்கையிலும் ஏதோ பிரச்சினை இருக்கிறது.

நமது பொருளாதாரக் கொள்கையை பாஜக அரசு புரிந்துகொள்ளவில்லை. பாஜகவின் தோல்வி உள்நாட்டோடு முடியவில்லை. வெளியுறவுக்கொள்கையிலும் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது.

எல்லையில் சீன ராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு, அத்துமீறல்களை மத்திய அரசு மறைக்க முயல்கிறது. நமதுஎல்லையில் சீன ராணுவம் அமர்ந்திருக்கிறது. ஆனால், அதை வெளியே சொல்லாமல் மத்திய அரசு மூடி மறைக்கப் பார்க்கிறது.

அரசியல்தலைவர்களை கட்டிப்படிப்பதாலும், அழைப்பின்றி வீட்டுக்குச்சென்று பிரியாணி சாப்பிடுவதால் மட்டும் உறவுகள் முன்னேறிவிடாது. பெரிதாக பேசுவது எளிது, ஆனால்,அதை செயல்பாட்டில் கொண்டுவருவது மிகக்கடினம்      

மேலும், பாஜகவின் தேசியவாதம் என்பது ஆங்கிலேயர்களின் பிரித்தாளும், ஆட்சிக் கொள்கை போன்றது. இரண்டுக்கும் வேறுபாடு இல்லை. பாஜக ஆட்சியில் அரசியலமைப்புச் சட்டத்தின் படி இருக்கும் அமைப்புகள் பலவீனமடைந்துவிட்டதாக மன்மோன் சிங் கூறினார்.