மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது: எய்ம்ஸ் தகவல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக  இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் மன்மோகன் சிங் உடல்நிலை குறித்து அறிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.  முன்னதாக, மன்மோகன் சிங்குக்கு திங்கள்கிழமை காய்ச்சல் ஏற்பட்டு, அதிலிருந்து அவர் குணமடைந்ததாக கூறப்படுகிறது.

. ஆனால், புதன்கிழமை மாலை அவரது உடல் பலவீனமடைந்ததையடுத்து, எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரலில் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்