நெருங்கும் பொதுத்தேர்தல்; முன்னாள் பிரதமருக்கு 10 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி!

Pakistan Imran Khan World
By Jiyath Jan 30, 2024 09:45 AM GMT
Report

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இம்ரான் கான் 

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 2018 முதல் ஏப்ரல் 2022, வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமராக இருந்தார். அவர் மீது, அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

நெருங்கும் பொதுத்தேர்தல்; முன்னாள் பிரதமருக்கு 10 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி! | Former Pak Pm Imran Khan Sentenced 10 Years Jail

அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் இம்ரானுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. இந்த வழக்கில் இன்று இம்ரான் கான் மற்றும் அவரது தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் துணை தலைவர் குரேஷிக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமானம் இல்லாவிட்டாலும் மனைவிக்கு அந்த தொகையை கணவன் கொடுக்க வேண்டும் - நீதிமன்றம் அதிரடி!

வருமானம் இல்லாவிட்டாலும் மனைவிக்கு அந்த தொகையை கணவன் கொடுக்க வேண்டும் - நீதிமன்றம் அதிரடி!

போட்டியிடுவது சந்தேகம்

இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. ஏற்கனவே பரிசு பொருள் வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

நெருங்கும் பொதுத்தேர்தல்; முன்னாள் பிரதமருக்கு 10 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி! | Former Pak Pm Imran Khan Sentenced 10 Years Jail

ஆனால் பிப்ரவரி 8 அன்று அந்நாட்டில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் இம்ரான் கான் போட்டியிடுவது சந்தேகம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பரிசு பொருள் வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.