இரட்டைக் கருணைக்கொலை - காதல் மனைவியின் கரம் பிடித்தபடி முன்னாள் பிரதமர் மரணம்!
கருணை கொலை மூலம் முன்னாள் டச் பிரதமரும் அவரது மனைவியும் ஒன்றாக மரணித்த சம்பவம் நடந்துள்ளது.
கருணை கொலை
நெதர்லாந்தின் முன்னாள் பிரதமரும் கிறிஸ்டியன் ஜனநாயக கட்சியின் தலைவருமானவர் டிரைஸ்-வான்-ஆக்ட். இவரது மனைவி யூஜின். இருவரும் திருமணமாகி 70 ஆண்டுகளுக்கும் மேலாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்தனர்.
இவர் 1977ல் இருந்து 1982 ஆம் ஆண்டு வரை அந்நாட்டு பிரதமராக இருந்தவர். 94 வயதாகிய டிரைஸ்க்கு கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டுக்கொண்டு இருந்தார்.
நெகிழ்ச்சி சம்பவம்
அவரது நிலைமையை பார்த்து மனைவி யூஜின் மனவேதனை அடைந்து இருந்த நிலையில், சட்டப்படி நெதர்லாந்து நாட்டிடம் தங்களை கருனை கொலை செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், அவரது கோரிக்கையை எற்ற அரசின் சட்டவிதிப்படி விஷ ஊசி செலுத்தப்பட்ட இருவரும் இணைந்தவாரே கைக்கோர்த்து மரணித்தனர். இச்சம்பவம் கேட்போரை நெகிழ செய்தது.